எல்லோரிடமும் கற்றுக்கொண்டே இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் கே.தங்கவேல்
திருப்பூர், செப்.13– பெரியவர், சிறியவர் என்று எந்த பாகுபாடும், பாரபட்சமும் இல்லாமல் எல்லோரிடமும் கற்றுக் கொண்டு அதைப் பொறுத்தமாகப் பயன்படுத்திய மகத்தான பண் பாளர், கொள்கையில் உறுதியாக இருந்து கொண்டு, பல்வேறு கட்சி யினரிடமும் இணக்கமாக செயல் பட்டவர் தோழர் கே.தங்கவேல் என்று நினைவஞ்சலி கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலின் ஐந் தாம் ஆண்டு நினைவு தினம் சனி யன்று திருப்பூரில் கடைப்பிடிக்கப் பட்டது. திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.தங்கவேல் நினைவஞ் சலி கூட்டம் நடத்தப்பட்டது. திருப் பூர் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர் வாகக்குழு உறுப்பினர் என்.சேகர், கொமதேக தெற்கு மாவட்டச் செய லாளர் வேலுச்சாமி, மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிர மணியம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, மதி முக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜன் எம்.சி., அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.பழனிச்சாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலா ளர், மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், திராவிட இயக்க மூத்த தலை வர், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் சு.துரைசாமி ஆகியோர் தோழர் கே.தங்கவேலின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். திருப்பூர் தற்போது தொழில் நெருக்கடியான சூழலை சந்தித்து வருகிறது. இத்தகைய நிலையில், கே.தங்கவேல் செயல்பட்ட விதத்தை உள்வாங்கி, பல தரப்பினரிடமும் கற்றுக் கொண்டு, ஜனநாயக ரீதி யாக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து கொள்கைரீதியாக உறுதியுடன் செயல்பட்டதை உள் வாங்கிக் கொள்ள வேண்டும். தேர் தல் வெற்றிக்காக சாத்தியமில் லாத விசயங்களைச் சொல்லாமல், மிக எதார்த்தமாக செயல்பட்டவர், ஆழமான புத்தக வாசிப்பாளர், பண்பாளர் அவரது சிறந்த இயல்பு களை உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் புகழ்ந் துரைத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியினருடன், திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, அனைத்து அர சியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வா கிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மலர் தூவி கே.தங்கவே லுக்கு அஞ்சலி செலுத்தினர். கோவை இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில், தோழர் கே.தங்க வேல் நினைவுதினம் அனுசரிக்கப் பட்டது. கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், கட்சியின் மூத்த தோழர் கள் முன்னாள் எம்பி., பி.ஆர்.நடரா ஜன், முன்னாள் எம்எல்ஏ யு.கே. வெள்ளிங்கிரி மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, இடைக்குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.