திருவாரூர், மே 3- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கீழ முகுந்தனூரில் வசித்த கட்சி உறுப்பினர் டி. கோவிந்தராஜ் உடல் நலம் இன்றி செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் கொர டாச்சேரி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி. ஜெயபாலின் சகோதரர் ஆவார். அன்னாரது மறைவு செய்தியறிந்து மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, விவசாயி கள் சங்க மாவட்டச் செய லாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. சீனிவாசன், கே.எஸ்.செந் தில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய் கிஷ் உட்பட பலர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.