மதுரை, அக்.26- ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யிலிருந்து மக்கள்பணியாற்றிய தோழர் ஆ.அடைக்கலம்(90) உடல்நலக்குறைவின் கார ணமாக சனிக்கிழமையன்று காலமானார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள சூவாஞ்சான் பட்டியைச் சேர்ந்தவர் தோழர் ஆ.அடைக்கலம். இவர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொடர்ந்து தற்பொழுது வரை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியிலும் பணியாற்றிவர். இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.மண வாளனின் (புதுக்கோட்டை மாவட்டம்) தந்தையுமாவார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (27.10.2019) சூவாஞ்சான்பட்டியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறுகிறது.