தொழிலையும் தொழிலாளரையும் காக்கும் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள்
ஈரோடு கருத்தரங்கில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பெருமிதம்
ஈரோடு, செப்.14 - அமெரிக்க அரசு இந்தியா மீது விதித்துள்ள அராஜக வரி விதிப்பைக் கண்டித்து இடது சாரி கட்சிகள் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத் தில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினர் கே.ஞானதேசிகன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் உரையாற்றினார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களி டம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இறுதி யாக சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெ.பி.கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார். தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்கு முன்னதாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பேசு கையில், “பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள் என்றால் தொழில் நடத்தக் கூடியவர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை தொடர்ச்சி யாக நம்மை எதிர்ப்பவர்கள் பரப்பிக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்தியா வில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு இன்றைக்கும் நிலைத்திருக்கிறது. குறிப்பாக 1952இல் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சேலம் இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களைப் பயன்படுத்தி தொழில்களை உருவாக்க வேண்டும். தூத்துக்குடியில் துறை முகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி னார்கள். அவை அனைத்தும் இன்றைக்கு நிறை வேறியிருக்கிறது” என்றார். கோவை, திருப்பூர் பகுதியில் தொழில்களைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பங்கு மகத்தானது என்றும், அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பணியையும் தாங்கள் செய்து கொண்டிருப்ப தாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவின் அடாவடி வரி விதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பாசுமதி அரிசி ரூ.3,500 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 61 விழுக் காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியால் பாசுமதி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பி னார். ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு, பஞ்சாப், கர்நாடகம், தில்லி ஆகிய மாநிலங்கள் பிரதான பங்கு வகிக்கிறது. 12 சதவிகித வரி, 62 சத விகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.30,000 கோடி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பஞ்சாலைகள், பின்ன லாடைகள், கார்மென்ட் தொழிற்சாலைகள் இயங்காது. அதனால் வேலை வாய்ப்பு இருக்காது. 19 லட்சம் வடமாநில தொழிலா ளர்களுக்கும் வேலை இருக்காது. பணப் புழக்கம் இல்லை என்றால் உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கும் என்று எச்சரித்தார். பிரதமர் மோடியின் ஆட்சியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலத் தில் ரூ.17,000 கோடி இறால் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது. ஆபரணங்களுக்கும் 5 விழுக்காட்டி லிருந்து 55 விழுக்காடாக வரி உயர்த்தப்பட்டு உள்ளது. தரைவிரிப்புகள் ஏற்றுமதியில் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வாகன உற்பத்தியில் ரூ.56,000 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. வரியில்லாத பட்டை தீட்டப்பட்ட வைரம், சோலார் பேனல் மீதும் 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேச முடியாத கையாலா காத அரசாக மோடி அரசு இருக்கிறது என்று சச்சிதானந்தம் எம்.பி., விமர்சித்தார். தைரியம் இல்லாத ஒன்றிய அரசு சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று இந்திய இளைஞர்களுக்கு கை விலங்கிட்டு, கால் விலங்கிட்டு சரக்கு வாக னங்களில் அனுப்பினர். சின்னஞ்சிறு நாடுகள் கூட எதிர்ப்பை தெரிவித்தன. ஆனால் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறை யில் இருக்கும் ஒன்றுதான் என்றார். மோடி டிரம்பிற்கு நெருக்கமானவர், டிரம்ப் மோடிக்கு நெருக்கமானவர். அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சென்று வாக்கு சேகரித்தனர். அணி சேரா நாடுகளுக்கு தலைமை வகித்த நாடு இந்தியா. ஆனால் இன்றைக்கு அமெரிக்கா வின் அடிமை தேசமாக மாறக் கூடிய அள விற்கு வந்துவிட்டது என்று கடுமையாக விமர்சித் தார். “பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான போரை மோடி அறிவித்தார். போர் நிறுத்தத்தை டிரம்ப் அறிவிக்கிறார். அதற்கு எதிராக கேள்வி எழுப்பிய போது நாடாளுமன்றத்தில் டிரம்ப் பெயரை உச்சரிக்கக் கூட இவர்கள் தயா ரில்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியிருந் தால் உடனே மோடி நிறுத்தியிருப்பார். ரிலை யன்சும், நயாராவும் அதனை ஜெட் பியூ லாக மாற்றி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய் கிறார்கள். ஏனென்று கேட்கும் தைரியம் இவர் களுக்கு இல்லை” என்றும் சச்சிதானந்தம் சாடினார். தேவையான நடவடிக்கைகள் 55 விழுக்காடு ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றால் இந்தியாவின் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே மாற்றுத் திட்டங்களை அரசு உரு வாக்க வேண்டும். ஏற்றுமதித் தொழிலில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனை வட்டி யில்லாக் கடனாக மாற்ற வேண்டும். கால நீட்டிப்பு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தாலும், சொத்து வரி உயர்வாலும் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசும் சலுகை அளிக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்தால் தான் தொழிலைப் பாதுகாக்க முடியும் என்றார். இது தொழில் முனைவோரைப் பாது காக்கும் நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியா வின் தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கை. ஆகவேதான் கம்யூனிச இயக் கங்கள் இதனை முன்னெடுத்திருக்கிறோம் என்று ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. தனது உரையை நிறைவு செய்தார். (ந.நி)
