tamilnadu

img

போதை பொருட்கள் இல்லாத திருவள்ளுரை மாற்ற உறுதி ஏற்பு

போதை பொருட்கள் இல்லாத திருவள்ளுரை மாற்ற உறுதி ஏற்பு 

திருவள்ளூர், அக் 11- திருவள்ளுர் மாவட்டம்,  பொன்னேரி அருகிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத திருவள்ளுர் என்ற தலைப்பில் போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர்.மு.பிரதாப், தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் உதவி ஆணையர் (கலால்) உதவி ஆணையர் (மது விலக்கு) பொன்சங்கர், கணேசன், தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குநர் ஆக்ஷயா கமலேஷ், துணை வேந்தர் மரு.நாராயண பாபு, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திரளன மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.