மறைந்த முனைவர் வே.வசந்தி தேவி நினைவேந்தல்: முதலமைச்சர் பங்கேற்பு
சென்னை, ஆக.10 - சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின், நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தின் முன்னாள் துணைவேந்த ரும், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தின் முன்னாள் தலைவரும், மூத்த கல்வியாளருமான மறைந்த முனை வர் வே.வசந்தி தேவி நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரை யில், “வாழ்நாள் முழுக்க எளிய மக்க ளின் உரிமைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக் காகவும் பாடுபட்டவர்தான் அறவழிப் போராளி மறைந்த முனைவர் வசந்தி தேவி அம்மையார். கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ, அதி காரக் கோட்டைக்குள் பாதுகாக்கப் படுகிற ஆயுதமாகவோ இல்லாமல், ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து செயலாற்றியவர்” என்று முதலமைச்சர் பாராட்டினார். “கல்வியில் சீர்திருத்தத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி, பொதுவுடைமைச் சிந்தனையும் மனித உரிமைக் கொள்கையும் கொண்டவராக விளங்கினார்” என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ் ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நீதியரசர் ஹரி பரந்தாமன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, வழக்கறி ஞர் ஹென்றி திபேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.