மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியம் பொதும்பு கிளை சார்பில் ‘பொதும்பு தியாகிகளின் 75ஆம் ஆண்டு’ நினைவை போற்றும் விதமாக நினைவஞ்சலி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். பி.லெனின் வரவேற்றுப் பேசினார். தியாகி ‘பொதும்பு பொன்னையா’வின் மகள் சி.அங்கம்மாள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினரை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் தலைவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர். கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.லாசர், சி.ராமகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.