ஜல்லிப்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்பு
தேனி, அக்.11- பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சி யில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பி னர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர், கிராம சபைக் கூட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காணொலி வாயி லாக ஆற்றிய உரை எல்.இ.டி திரையில் ஒளிபரப்பு செய்யப் பட்டதை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இணை இயக்குநர் (வேளா ண்மை) சாந்தாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
