அருப்புக்கோட்டை பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
அருப்புக்கோட்டை, அக்.3- அருப்புக்கோட்டை பகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் விருது நகர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. 11 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 229 முகாம்களும், நகரப் பகுதி களில் 120 முகாம்களும் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறை கள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படு கிறது. இந்நிலையில், காரியாபட்டி அருகே யுள்ள ஆவியூர் ஊராட்சி மற்றும் அருப் புக்கோட்டை வட்டம், செம்பட்டியில் நடை பெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகா மினை ஆட்சியர் ஆய்வு செய்தார். அதில், பட்டா கோரி மனு அளித்த வர்களுக்கு அதற்கான உத்தரவுகளையும், மின் இணைப்பை பெயர் மாற்றம் கோரி யவர்களுக்கு மாற்றம் செய்ததற்கான நகல், விவசாயிகளுக்கு விதைப்பை, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் தார்பாய்களையும் வழங்கினார். இதையடுத்து, அருப்புக்கோட்டையில் ரூ.7 கோடியே 57 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் தினசரி வணிக வளாகம், ரூ.7 கோடியே 92 லட்சத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையப் பணிகள் ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.
