tamilnadu

img

அக்.5,6 கடற்கரையில் கடலோர காவல்படை பயிற்சி

அக்.5,6 கடற்கரையில் கடலோர காவல்படை பயிற்சி

சென்னை, அக். 2- கப்பல்களில் இருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் கடல் மாசடை வதை தடுப்பது தொடர்பான தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை திட்டம் குறித்த இந்திய கடலோர காவல்  படையின் பயிற்சி சென்னை கடற்கரை அருகே வரும் ஐந்து, ஆறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.    இந்த பயிற்சியில் முக்கிய துறைமுக நிர்வாகத்தினர், எண்ணெய் கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் 29 நாடுகளைச் சேர்ந்த 37க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வை யாளர்கள் இதில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள் ளது குறிப்பிடத்தக்கது.