ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.2.50 கோடியில் புதிய கோசாலை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி, அக். 14- முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலின் ஜவுளி ரெங்கசாமி கட்டளை தோப்பில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோசாலையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் புதிய கோசாலையினை பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சி யர் சரவணன் கூறும்போது, “இந்த கோசாலையில் பசுக்களுக்கான கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 1 கொட்ட கையில் 40 மாடுகள் வீதம் 3 கொட்டகைகள். மொத்தமாக 120 மாடுகள் அடைக்கப்படும் வசதி உள்ளது. இதில் மருத்துவ அறை மற்றும் தீவனக் கிடங்கு இடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த பணி விரைவாக தொடங்கி தற்பொழுது நூறு சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் காணொலி மூலம் திங்களன்று திறந்து வைத்தார்’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், ஸ்ரீரங்கம் வரு வாய் கோட்டாட்சியர் சீனி வாசன், திருச்சி மண்டல இணை ஆணையர் ஞான சேகரன், திருக்கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
