tamilnadu

img

மத்திய சங்கமாக சிஐடியு வெற்றி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 24- மத்திய பொதுத்துறை நிறுவன மான பெல் (பிஎச்இஎல்) தொழிற் சாலையில் ஒன்றிய அரசுடன் நேரடி யாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தகுதி படைத்த சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில், மத்திய சங்  கங்களில் ஒன்றாக சிஐடியு வெற்றி  பெற்றுள்ளது. பெல் நிறுவனம் திருச்சி, திரு மயம், போபால், ஜான்சி ஆகிய  இடங்களில் இயங்கி வருகிறது. இவற்றில் மத்திய சங்க அங்கீகா ரத்திற்கான தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெற்றது. திருச்சி யூனிட்டில் 9 சங்கங்கள் போட்டியிட்டன. கடுமையான போட்டி நிலவியது. தொழிலாளர் களின் வாக்குகளில் 10 சதவீதத்திற்  கும் அதிகமான வாக்குகளை பெறும் சங்கங்கள் பேச்சுவார்த் தைக்கு தகுதி படைத்த சங்கங்க ளாக அங்கீகரிக்கப்படும். இதில்  வாக்கு எண்ணிக்கை அடிப்படை யில் உள்ளூர் தொழிற்சாலை நிர்வா கத்துடன் மட்டும் பேச்சு நடத்த  அங்கீகாரம், தில்லியில் நடை பெறும் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்பதற்கான அங்கீகாரம் என இரண்டு வகை உண்டு. இந்த இரண்டிலும் சிஐடியு அங்கீகாரம் பெற்ற சங்கமாக வெற்றி பெற் றுள்ளது.

திருச்சி யூனிட்டில் பெருவாரி யான தொழிலாளர்களின் ஆதர வோடு, தொடர்ந்து 45 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உள்ள சிஐடியு, மீண்டும் தற்போ தைய தேர்தலில் தொழிலாளர் களின் நம்பிக்கையை பெற்ற சங்  கங்களில் ஒன்றாக வெற்றி பெற்றுள்  ளது. இந்த யூனிட்டில் தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டி யுசி, பிஎம்எஸ், சிஐடியு ஆகிய சங்  கங்கள் வெற்றி பெற்றுள்ளன. திருமயம் யூனிட்டில் நடை பெற்ற தேர்தலில் சிஐடியு, ஐஎன்டி யுசி, பொது தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் உள்ள பெல் யூனிட்டில் நடைபெற்ற தேர்தலில், சிஐடியு  மகத்தான வெற்றியை ஈட்டியுள்  ளது. இது அங்கு நீண்ட இடை வெளிக்கு பிறகு தொழிலாளர்கள் அளித்துள்ள வெற்றியாகும். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள பெல் யூனிட்டில் நடைபெற்ற தேர்தலிலும் சிஐடியு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மற்றும் போபால் ஆகிய  பிரதான யூனிட்டுகள் மட்டுமின்றி அனைத்து யூனிட்டுகளிலும் சிஐ டியு வெற்றி பெற்றுள்ள நிலையில், பெல் கூட்டு பேச்சுவார்த்தைக் குழு வில் மத்திய சங்கமாக சிஐடியு  தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட் டுள்ளது. உள்ளூர் மட்ட பேச்சு வார்த்தை மட்டுமின்றி, தில்லியில் நடைபெறும் அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் சிஐடியு சங்கம்  சார்பில் சிஐடியு பொதுச் செயலா ளரே நேரில் பங்கேற்க முடியும். திருச்சி மையமாக கொண்ட  பெல் நிறுவனத்தில் நடப்பு தேர் தலை சிஐடியுவில் பெருவாரியாக உறுப்பினராக இணைந்துள்ள இளம் தொழிலாளர்கள், கடும்  போட்டியை சந்தித்து இந்த மகத் தான வெற்றியை ஈட்டியுள்ளனர். இத்தேர்தலில் தீவிர உழைத்து வெற்றியை ஈட்டிய அனைத்து  தோழர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் பெல் தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் பிரபு, செயலாளர் பரமசிவம் உள் ளிட்டோர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

;