பாக்ஸ்கான் ஆலையின் இளம்பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடிய சிஐடியு தலைவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட அவர்கள் வியாழனன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறை வாயிலில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தி:3