சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 38 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல், செப்.24- பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திண்டுக்கல் பணி மனை முன்பு சிஐடியு அரசு போக்கு வரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தி னர் 38 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 24 மாதமாக பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள ஓய்வுக்கால பலன் களை வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 வருட ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். திண்டுக்கல் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு கோட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் என்.ராமநாதன் முன்னிலை வகித்தார். போராட்டதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். சிஐடியு தேனி மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, கட்டுமான தொழிலா ளர் சங்க மாநிலச் செயலாளர் ஜி. சண்முகம், பி.பிச்சைமணி ஆகியோர் ஆதரித்து பேசினர். சங்க பொருளாளர் ரூபன் அம்பு ரோஸ், துணைப் பொதுச்செயலாளர் கள் ஜி.வெங்கிடுசாமி, ஜி.கணேஷ் ராம், எஸ்.அனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.