tamilnadu

img

சிஐடியு அரியலூர் மாவட்டச் செயலாளரும்

சிஐடியு அரியலூர் மாவட்டச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.துரைசாமி - சித்ராதேவி தம்பதியின் இளைய மகன் துரை.ஸ்டாலினுக்கும், அரியலூர் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த வரதன் (லேட்) - விஜயா தம்பதியின் மகள் வ.கனிமொழிக்கும் அரியலூரில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரை.அருணன், ஆர்.மணிவேல் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.