tamilnadu

img

6 இடங்களிலும் சிஐடியு - ஏஐடியுசி வெற்றி

6 இடங்களிலும் சிஐடியு - ஏஐடியுசி வெற்றி

திருச்சி மாநகராட்சி நகர விற்பனைக்குழு தேர்தல்

திருச்சிராப்பள்ளி, மே 31-  திருச்சி மாநகராட்சியில் நடை பாதை வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் நடைபாதை விற்பனை ஒழுங்குபடுத்த நகர விற்பனைக் குழு அமைக்கப்பட உள்ளது.  இந்த விற்பனைக்குழுவிற்கான 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வெள்ளிக் கிழமையன்று திருச்சி பிஷப்ஷீபர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. இதில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் தலா 3 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்  தப்பட்டனர். எஸ்டிடியு சார்பில் 3 பேரும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 6 பேரும் போட்டியிட்டனர். மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்ட 6,220 நடை பாதை வியாபாரிகளில், 1,949 வாக்க ளித்தனர். நள்ளிரவு வரை இரண்டு சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  முடிவில் பொதுப்பிரிவு உறுப்பி னர் தேர்வில் ரா. கணேசன் (சிஐ டியு) 1,013 வாக்குகளும், மகளிர்  பொதுப்பிரிவு உறுப்பினர் தேர்த லில் செல்வி (சிஐடியு) 1,106 வாக்கு களும், மகளிர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உறுப்பினர் தேர்தலில் சுமதி  (ஏஐடியுசி) 1,050 வாக்குகளும், பட்டி யல் வகுப்பினர் பிரிவு உறுப்பினர் தேர்தலில் முருகானந்தம் (ஏஐடி யுசி) 1,161 வாக்குகளும், மாற்றுத் திறனாளிகள் பிரிவு உறுப்பினர் தேர்தலில் தி. கணேசன் (சிஐடியு) 1,022 வாக்குகளும், சிறுபான்மை வகுப்பு பிரிவு உறுப்பினர் தேர்த லில் அன்சார்தீன் (ஏஐடியுசி) 1,006 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்ற னர். இந்த வெற்றியை சிஐடியு - ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு, சிபிஎம் திருச்சி மாநகர் மாவட்டச்  செயலாளர் கோ. வெற்றிச்செல் வன்,  சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி  மாநகர் மாவட்டச் செயலாளர் சுரேஷ், சிபிஎம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் லெனின், மாவட்டக்குழு  உறுப்பினர்கள் சேதுபதி, விஜேந்தி ரன் சிஐடியு நிர்வாகிகள் மாறன், எஸ்.கே. செல்வராஜ், சார்லஸ், ரகு பதி, கோவிந்தன், அப்துல்லா, நத்தார், ஷேக் உள்ளிட்டோர் பொன்  னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரி வித்தனர்.