ஐ நாவின் அமைதிப் பதக்கத்தை பெற்ற சீனாவின் அமைதிக் காப்பு படைகள்
சூடானின் அபியீ பகுதியிலுள்ள சீனாவின் 5ஆவது தொகுதி அமைதிக் காப்புப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் படையினர்களுக்கு, அபியீ பகுதிக்கான ஐ.நா தற்காலிகப் பாதுகாப்புப்படை உள்ளூர் நேரப்படி அக்டோபர் முதல் நாள் முற்பகல், “அமைதி பதக்கத்தை” வழங்கிச் சிறப்பித்தது. 2024ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் இதுவரை, இந்த ஹெலிகாப்டர் படை 9000க்கும் மேலானோரையும், 650 டன்னுக்கும் அதிகமான எடையுடைய சர்க்குகளையும் அனுப்பியது. இப்படை பறத்தல் கடமையை நிறைவேற்றிய நீளம் 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. இதனிடையில், லெபனானிலுள்ள சீனாவின் 23ஆவது தொகுதி அமைதிக் காப்புப் படையினர்களுக்கு அக்டோபர் முதல் நாள் பிற்பகல் ஐ.நாவின் “அமைதிப் பதக்கம்” வழங்கப்பட்டது. கடந்த ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல் இதுவரை, அவர்கள் 61 முறை மனித நேய உதவியளித்து, 3300க்கும் மேலான நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கியுள்ளனர். மனித குலத்தின் அமைதி லட்சியத்துக்கு முக்கியப் பங்காற்றியவர்களைப் பாராட்டும் விதம், ஐ.நா. அவையானது “அமைதிப் பதக்கம்” என்ற விருதை உருவாக்கியுள்ளது. இவ்விருதுகள் உலக அமைதியைப் பேணிக்காப்பது என்ற வாக்குறுதியைச் செயல்படுத்தி வரும் சீனப் படைவீரர்களின் மனவுறுதிக்கும், சீனாவின் பொறுப்புணர்வுக்கும் சாட்சிகளாகத் திகழ்கின்றன.
