போட்ஸ்வானாவுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க சீனா முடிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் தான் தயாரிக்கும் சினோவக் தடுப்பூசிகளைத் தரப்போவ தாக போட்ஸ்வானாவுக்கான சீனத்தூதர் வாங் சியுபெங் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவுக்குக் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் வழங்குவது என்ற சீனாவின் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த நன்கொடை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் தங்கள் பகுதி சார்ந்த பிரச்சனைகளைக் கையாள் வது ஆகியவை பற்றி துருக்கி ஜனாதிபதி ரெசப் தய்யீப் எர்டோகன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இது குறித்து துருக்கி ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இருதரப்பு உறவுகளை மேம் படுத்துவதோடு, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடு களில் உள்ள நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்த னர்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவி வந்தாலும் கம்போடி யாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் தொடர் முன்னேற்றம் காணப்படுகிறது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நடைபெற்ற பல்வேறு கொண்டாட்டங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர். வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநாளில் கம்போடி யாவுக்கு வந்தனர். கடந்த ஆண்டை விட 63.65 விழுக் காடு அதிகமான அளவு பயணிகள் வந்துள்ளனர்.