tamilnadu

“கோட்சே வாரிசுகளுக்கு இந்தியாவில் இடமில்லையென சூளுரைப்போம்

சென்னை, ஜன. 30- தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் ஞாயிறன்று (ஜன. 30) அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி இந்தியா முழுவதுமுள்ள காந்தி நினைவிடங்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அந்தவகையில் சென்னை மெரினாவிலுள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் ்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத் ்தினர். சிலைக்கு அருகே சென்னை சர்வோதய சங்கத்தினர் பள்ளி மாணவி களுடன் இணைந்து பாடிய தேச பக்தி யூட்டும் பாடல்களை ஆளுநரும், முதலமைச்சரும் சிறிது நேரம் கேட்டனர். அப்போது அச்சங்கத்தின் சார்பில் இருவருக்கும் கதர் நூல் மாலை பரிசளிக்கப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடி களின் நினைவுநாளில், அன்பும் சகோதர த்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களதுதீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளு ரைப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.