tamilnadu

img

முதல்வர் ஸ்டாலினுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

உடுமலை, ஆக.10- பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (இன்று) உடுமலைக்கு  வரவுள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில் நடைபெறும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் ஞாயிறன்று விமானம் மூலம் கோவை வருகை தந்தார். தொடர்ந்து, பொள்ளாச்சி சாலை  வழியாக உடுமலை நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும் அவ ருக்கு பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற் பளித்தனர். திங்களன்று (இன்று) காலை திருப்பூர் நெடுஞ் சாலை சந்திப்பு தொடங்கி வாகனத்தில் இருந்தவாரே, பொது மக்களை சந்தித்தபடி, உடுமலை நகருக்கு வருகிறார். உடு மலை நகர நேதாஜி மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி யில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, உடுமலை நேரு வீதியில் அமைக்கப்ட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின் பொள்ளாச்சி சென்று மகாலிங்கம் பொறியியல் கல் லூரிக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள நீர்வளத்துறை அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்துவிட்டு, கோவை விமான நிலையம் சென்று  சென்னை செல்லவுள்ளார்.