டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு முதலமைச்சர் அஞ்சலி
முன்னாள் ஒன்றிய அமைச்சரும் திமுக பொருளாளரும் டி.ஆர்.பாலு மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலமானார். அவருக்கு வயது 79. சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். முதலமைச்சருடன் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் இருந்தார்.