tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை  

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரை முருகன் வியாழக்கிழமை தெரிவித்தார். ஆஞ்சியோ பரிசோ தனையில் முதலமைச்சருக்கு அடைப்பு எதுவும் இல்லை என  மருத்துவர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற் கொண்டபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல மைச்சர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று  மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவ மனையில் இருந்தே பணிகளைக் கவனித்து வந்தார். முதலமைச்சருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சனை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்து வப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறு பாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் ஜி.செங்குட்டுவேலு தலைமை யிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்போலோ மருத்துவமனையில் வியாழனன்று காலை செய்யப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற் கொள்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உரிமை மீட்பு பயணம்’: ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை: ஜூலை 25 முதல் ‘உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார் அன்பு மணி ராமதாஸ். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மாநில காவல்துறை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. “எனது அனுமதி யின்றி அன்புமணி பாமக கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரச்சாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும்” என  ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறு வனர் ராமதாஸ் தரப்பில் மாநில காவல்துறை தலைவரிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இயங்கி வரும் அழ கப்பா கல்லூரியில் பயின்று வந்த மாணவர் சபரீஷ்வரன் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட தாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அழகப்பா கல்லூரி யில் இளங்கலை 2ஆம் ஆண்டு லெதர் டெக்னாலஜி படித்து வந்த 18 வயதாகும் சபரீஷ்வரன், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்கொலைக் கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை நடை பெற்று வருகிறது.

வங்கக் கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, அதனை ஒட்டிய மேற்குவங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: பயணி கள் கூட்டம் அதிகம் உள்ள ரயில்களில் கூடு தல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன என  தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - ஆந்திர மாநிலம் விஜயவாடா பினாகினி விரைவு ரயி லில் ஜூலை 26 ஆம்  தேதி முதல் இரு மார்க்கத் திலும் மூன்றாம் வகுப்பு  ஒரு ஏசி பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது. இதுபோல மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலில் ஜூலை  27ஆம் தேதி முதல் மூன்றாம் வகுப்பு ஒரு ஏசி  பெட்டி மற்றும் மூன்று இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட  பெட்டிகள் நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளன என தெற்கு  ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.