tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, பிப். 24- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி  4-6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்  தள பதிவில், “சதம் அடித்து இந்திய அணியின் வெற்றி க்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பை யை வெல்ல இதே உத்வே கத்துடன் செயல்படுங்கள்” என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் வேலை நிறுத்தம் இராமேஸ்வரம்,

பிப். 24-  இலங்கை கடற்படை யினரால் சிறைப்பிடிக்கப் பட்ட 32 மீனவர்களை விடு தலை செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் போவதை தடுத்து நிறுத்தி படகுகளையும் மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர்.