tamilnadu

img

‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ மெய்ப்பட உழைப்போம்: முதல்வர்

சென்னை,ஜூலை 15- காமராஜர் பிறந்த நாளில், ‘வீட்டிற்கோர் புத்தக ச்சாலை’ என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழை ப்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காம ராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்விக் கண் திறந்த பெருந் தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளன்று, நங்க நல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றி னேன். என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை லட்சம் புத்தகங்களை தமிழ்நாட்டின் பல்வேறு நூல கங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித் துள்ளேன். அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், கருணாநிதி அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில் 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன். பெருந் தலைவர் காமராஜர் பிறந்த நாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று பேர றிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்! இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.