நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே
சென்னை, அக். 11 - கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி களை இணைத்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் சனிக்கிழமை (அக்.11) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளின் பொதுமக்களி டம் உரையாற்றினார். இந்நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஃபைப்ரெட் கார்ப்பரே ஷன் இணைப்பில் உள்ள 10 ஆயி ரம் ஊராட்சிகளில் இணையத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது. இந்நிகழ்வின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவ ளம் ஊராட்சி, தென்காசியில் முள்ளிக் குளம் ஊராட்சி, கோயம்புத்தூரில் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரத்தில் கொண்டாங்கி ஊராட்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய ஊராட்சி களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதலமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடினர். குடிசையில்லாத் தமிழகம் அப்போது, கிராம மக்கள் தங்க ளுடைய ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சிப் பாதையில் கிராம ஊராட்சியை கொண்டு செல்ல வும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராம சபைக் கூட்டங் கள் நடத்தப்படுகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார். ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்டிவிடும் வகையில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற புரட்சிகரத் திட்டம் துவங்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏழா யிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முடிவெடுத்து, 2024-25-இல் இது வரை, 99 ஆயிரத்து 453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக் கின்றன என்று தெரிவித்த முதல மைச்சர், 2025-26இல், இன்றைய நிலையில், 78 ஆயிரத்து 312 வீடு கள் கூரைமட்ட நிலையில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். மூன்று முக்கிய தேவைகள் முன்னதாக, கிராம சபைக் கூட்டத்தில், மக்களின் மூன்று முக்கிய அத்தியாவசிய தேவைகளைத் தேர்வு செய்து ஒப்புதல் பெறுதல், இழிவான பொருள் தரும் சாதிப்பெ யர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள பெயர்களை நீக்கி புதிய பொருத்தமான பெயர்களை வழங்கு தல் குறித்த தீர்மானம் எடுக்கப் பட்டது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு நலிவு நிலை குறைப்புத் திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறு தல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்து கிராம சபைகளில் விவாதம் நடைபெற்றது.
