tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலமைச்சர் பெருமிதம்

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ சின்னம் என்ற அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. தமிழ்நாட்டின் கலாச்சார பாரம் பரியத்திற்கான இது ஒரு பெருமிதமான தருணம். சோழர்  கால கோயில்கள் உள்ளிட்ட தமிழ்நாடு பாரம்பரிய சின் னங்கள் வரிசையில் செஞ்சியும் இணைத்துள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்  பதிவில் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் தொல்லை: 3 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், வண்ட லூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் குழந்தைகள்  நல காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  கொடுத்த விவகாரம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல  அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பாதிக்கப் பட்ட குழந்தைகள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படை யில், அந்த காப்பத்தின் உரிமையாளர் அருள்தாஸ், அவ ரது மகள் பிரியா மற்றும் ஓட்டுநர் பழனி ஆகியோர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

‘கூட்டணி ஆட்சிதான்’

சென்னை: ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா கூறவில்லை என்று பழனி சாமி பேசி வரும் நிலை யில், தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா  திட்டவட்டமாக தெரிவித் திருக்கிறார். மேலும் ஆட்சி யில் பாஜக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு, ‘ஆம்’  என அமித் ஷா ஆங்கில  நாளிதழுக்கு அளித்த  பேட்டியில் தெரிவித்திருக் கிறார்.

‘பாஜகவுடன் கூட்டணியே இல்லை’

சென்னை: ‘மக்களால் வெறுக்கப்படும் பாஜக வுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. தமிழக  வெற்றிக் கழகத்தின் தலைமையில் மட்டுமே கூட்டணி’ என்று செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில்  எப்போதும் மாற்றமில்லை என்றும், விஜயை கூட்ட ணிக்குள் கொண்டு வர முயற்சி என அமித் ஷா சூசக மாக கூறிய நிலையில், தவெக இந்த விளக்கத்தை அளித் திருக்கிறது.

வினாத்தாள் விவகாரம்: விசாரணை

சென்னை: மதுரையில் குரூப் 4 வினாத்தாள் கட்டுகள்  பாதுகாப்பற்ற முறையில் கொண்டு வந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டு உள்ளோம். ஆட்சியரிடம் இருந்து அறிக்கை வந்ததும்,  அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) தலைவர் பிரபாகர் உறுதிபட தெரிவித்திருக் கிறார்.

ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரச மைப்புச் சட்டப் பிரிவு 370 - ஒரு வரலாற்றுப் பிழை என்று  கூறியதை கடுமையாக கண்டித்துள்ளார். ஆளுநர்  ரவி தனது பதவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக  திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு தனி அதிகாரங்கள் இல்லை என தீர்ப்பளித்துள்ளதையும் நினைவு படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ்ஸின் வகுப்புவாத கொள்கை களை பிரச்சாரம் செய்யும் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுவதாக கடுமையாக கண்டித்து, அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்”  என்று வலியுறுத்தியுள்ளார்.

படகு சேவை தற்காலிக ரத்து நாகர்கோவில்:

கன்னி யாகுமரி கடலில் நீர் மட்டம் குறைவதால், விவே கானந்தர் மண்டபம், திரு வள்ளுவர் சிலை மற்றும்  கண்ணாடி கூண்டு பாலத் திற்கு செல்லும் சுற்றுலா  படகு சேவை தற்காலிக மாக நிறுத்தப்பட்டுள்ளது. படகு நிலைய வளாகத் திற்குள் சுற்றுலா பயணி கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என  பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழகம் அறிவித் துள்ளது. 

ரூ.3 லட்சம் நிதியுதவி சென்னை: தஞ்சாவூர் மாவட்டம்

திருவேங்கட உடையான்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் ஜஸ்வந்த் (8), மாதவன் (10), பாலமுருகன் (10) ஆகிய மூவரும் ஜூலை 11  அன்று மாலை பள்ளிக் குச் சென்றுவிட்டு மருதங் குடி கிராமத்தில் உள்ள ஊரணிகுளம் என்கிற பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து முத லமைச்சர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த  அதிர்ச்சியும் வேதனை யும் அடைந்தேன். உயிரி ழந்த சிறுவர்களின் பெற் றோர்களுக்கும் அவர் களது உறவினர்களுக் கும் எனது ஆழ்ந்த இரங்க லையும் ஆறுதல்களை யும் தெரிவித்துக் கொள் வதோடு, அவர்களது பெற் றோர்களுக்கு தலா 3  லட்சம் ரூபாய் முதல மைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு ஆதரவு

சென்னை: முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத் தலை வர்கள், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.