தமிழ்நாட்டுக்கு தலைமை நீதிபதி பாராட்டு
சென்னை,ஜூலை 18- ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்க்கு உயர்நீதி மன்றத்தின் சார்பில் வெள்ளி யன்று (ஜூலை 18) வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. விழா வில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசுகையில், புகழ்மிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாத பதவிக் காலத்தில் அதி களவில் கற்றுக் கொண்டுள்ள தாகவும், முழு திருப்தியுடன் விடை பெறுவதாகவும் குறிப்பிட்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறி ஞர்கள் ஆஜராகின்றனர். அதே போல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழ்நாடு நீதித் துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதி களில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுவதா கவும் கூறி, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளையும் குறிப்பிட்டுப் பேசினார். தலைமை நீதிபதியின் பிரிவு உபச்சார விழாவில், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத் தின் பிரதிநிதிகள் பங்கேற்ற போதும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் நிர்வாகிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
ராணிப்பேட்டை கலை அறிவியல் கல்லூரியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை, ஜூலை 18 – வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கல் (ஆர்ஐடி) ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000-த்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டய படிப்பு, நர்சிங் உள்ளிட்ட கல்வி தகுதி உடையவர்கள் தேவையான வேலையை தங்கள் அளவில் தேர்வு செய்து பயன் பெறலாம். விருப்பமும், தகுதியும் உள்ள வேலை நாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் உள்ளூர் தனியார்துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்கள் பான் கார்டு, ஜிஎஸ்டி. சான்றிதழ் நிறுவன சான்றிதழ் உத்யோக் ஆதார் ஆகியவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் நிறுவ னம் தனியார் வேலைவாய்ப்பு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இத் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது, எனவும் இவ் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார்.
தமுஎகச புதிய கிளை உதயம்
சென்னை,ஜூலை 18- வட சென்னை மாவட்டம் திருவிக நகரில் தமுஎகச புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் கரன் கார்க்கி, மாவட்டச் செயலாளர் மணிநாத் ஆகியோர் கலந்து கொண்ட னர். தலைவராக ஏ.சுந்தரமூர்த்தி, செயலாளராக எம்.அசோக் குமார், பொருளாளராக எழுத்தாளர் மதி உள்ளிட்ட 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
குலத்தொழில் செய்யக்கோரி வாலிபர் மீது தாக்குதல்
ழில் செய்யக்கோரி வாலிபர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஎம் சார்பில் குடும்பத்துடன் வாலாஜா காவல் நிலை யத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், திருமலைச்சேரி கிராமத்தைச் சார்ந்த சரவணன் இந்து புதிரை ஆதி திராவிடர் வண்ணார் இனத்தைச் சேர்ந்த வர். இவருக்கு மனைவி, 2 ஆண் பிள்ளை கள் உள்ளனர். கடந்த செவ்வாயன்று (ஜூலை 15) திருமலைச்சேரி ஆதிதிராவிடர் பகுதியில் மாரியம்மன் கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது. அதில் சரவணன் கிரகம் ஏந்துவதாக ஏற்றுக் கொண்டு கோவில் பணி செய்து வந்தார். அவருடைய மகன் கோகுல்ராஜ் என்பவரை அதே பகுதியில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த விக்கி (எ) விக்னேஷ், தந்தை பரந்தா மன், மணிவண்ணன், கலையரசன் ஆகி யோர் வலுக்கட்டாயமாக, ‘‘நீ தீப்பந்தம் ஏந்த வேண்டும் உன்னுடைய குலத்தொழில் அது தான். இல்லையென்றால் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டும்’’ என சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரு டன் வியாழனன்று (ஜூலை 17) தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாலாஜா காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.