tamilnadu

img

சேரன் மெட்ரிக் பள்ளி சாதனை

சேரன் மெட்ரிக் பள்ளி சாதனை

கரூர், மே 16 - கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணை மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.  மாணவி பி.எஸ்.தர்ஷனா 495 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அளவில் 2 ஆம்  இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவிகள் எ.ரிதன்யாஸ்ரீ மற்றும் ஆர்.சங்கமித்ரா 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் 2 ஆம் இடம் பிடித்துள்ளனர். மாணவி கே.தன்யா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மாணவி கள் எம்.எஸ்.நேத்ரா மற்றும் எஸ்.தனுஸ்ரீ 491 மதிப்பெண்கள் பெற்று 4 ஆம் இடம் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 6 மாண வர்களும், அறிவியல் பாடத்தில் 4 மாண வர்களும், கணிதத்தில் ஒரு மாணவியும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். தமிழில் 7 மாணவர்கள், ஆங்கி லத்தில் 15 மாணவர்கள், கணிதத்தில் 3  மாணவர்கள், அறிவியலில் 6 மாண வர்கள், சமூக அறிவியலில் 12 மாணவர் கள் 99/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை புரிந்த மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் பி.எம்.கே.பெரிய சாமி, தாளாளர் பி.எம்.கே.பாண்டியன், முதல்வர் வி.பழனியப்பன், இருபால் ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவச் செல்வங் கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பிளஸ் 1 தேர்வு  புதுக்கோட்டை மாவட்டம் 87.80% தேர்ச்சி

புதுக்கோட்டை: மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதத்  தேர்ச்சி பெற்று 35ஆவது இடத்தில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள் 179. இவற்றில் 8,924 மாணவர்களும் 10,394 மாணவிகளும் என மொத்தம் 19,318 பேர் தேர்வெ ழுதினர். இவர்களில், 7,283 மாணவர் களும், 9,678 மாணவிகளும் என மொத்தம் 16,961 பேர் தேர்ச்சி பெற்றனர்.  இது 87.80 சதவீதமாகும். மாநிலத் தர வரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 35 ஆவது இடத்தில் உள்ளது. நூறு சதவீதத் தேர்ச்சி... புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 179 பள்ளிகளில், 41 பள்ளிகள் நூறு சத வீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இவற்றில் 5 பள்ளிகள் அரசுப் பள்ளி களாகும். கடந்த கல்வியாண்டில்... கடந்த 2023-24 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வில், புதுக்கோட்டை  மாவட்டம் 88.02 சதவீதத் தேர்ச்சி பெற்று மாநிலத் தரவரிசைப் பட்டிய லில் 29 ஆம் இடத்தில் இருந்தது.  தற்போது, 87.80 சதவீதமாகக் குறைந்து,  35 ஆவது இடத்துக்கு தள்ளப் பட்டுள்ளது.