tamilnadu

img

சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்

சென்னை சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் சூட்டல்

சென்னை, பிப். 18 - சென்னை மாநகராட்சி க்கு உட்பட்ட சாந்தோம் பகுதியில் இசை மேதை எம்.எஸ். விஸ்வ நாதன் வசித்து வந்த பகுதியி லுள்ள ‘டிமாண்டி சாலை’க்கு, எம்.எஸ். விஸ்வ நாதன் சாலை என பெயர் சூட்டப்பட்டது.  தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், இதற் கான பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.  இதேபோல், பின்னணி பாடகர்களான மறைந்த திருச்சி ஆர். லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகி யோரின் பெயர்களையும் அவர்கள் வசித்துவந்த மந்தைவெளி பகுதி சாலை களுக்கு முதலமைச்சர் சூட்டினார்.