மூளை திசுக்கள் வெளிப்படும் நிலையில் அறுவை சிகிச்சை சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல் 30 வயது நபர் வீடு திரும்பினார்
சென்னை, ஜூலை 2 - சாலை விபத்தில் சிக்கி மண்டை ஓடு எலும்பு முறிவு ஏற்பட்டு, மூளை திசுக்கள் வெளியே தெரிந்த 30 வயது நபருக்கு சென்னை காவேரி மருத்துவ மனை மருத்துவர்கள் சிக்கலான மூளை அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த அந்த 30 வயது நபர் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது உணர்விழந்த நிலையிலும், மூளையில் ஆபத்தான தொற்றுடனும் இருந்தார். அவர் வெண்டிலேட்டர் ஆதரவை நம்பியே இருந்தார். அவருக்கு அவசர நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் உடைந்த மண்டை ஓடு துண்டுகள் அகற்றப் பட்டன. மேலும், மூளையை பாது காக்கும் “டியூரா” எனப்படும் படலம், அவரது தொடையில் இருந்து எடுக்கப்பட்ட பாஸ்சியா லாட்டா எனப்படும் திசு மூலம் மீண்டும் கட்ட மைக்கப்பட்டது. காயத்தின் தீவிரம் மற்றும் தொற்று இருந்ததால், இந்த அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான தாக இருந்தது என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. 10 நாட்களுக்குப் பிறகு நோயாளியை வெண்டிலேட்டரில் இருந்து மருத்து வர்கள் நீக்கியுள்ளனர். நோயாளி மெது வாக முன்னேற்றத்தின் ஆரம்ப அறிகுறி களுடன் குணமடைய தொடங்கினார். எனினும் நோயாளிக்கு ஹைட்ரோ செபலஸ் (மூளையில் திரவம் சேர்தல்) என்ற நிலை ஏற்பட்டது. இது மூளையில் அழுத்தத்தை அதிகரித்தது. இதனை சரிசெய்ய, இரண்டாவது அறுவை சிகிச்சை மூலம் வென்ட்ரிகுலோ பெரிட்டோனியல் (VP), ஷன்ட் (ஒரு குழாய் அமைப்பு) பொருத்தப்பட்டது. இது கூடுதல் திரவத்தை வடிகட்டி, அவரது நிலையை உறுதிப்படுத்தியது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நோயாளி அடிப்படை நரம்பியல் செயல்பாடுகளை மீண்டும் பெற்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சிக்கலான மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.