tamilnadu

img

மாநில அளவிலான ரோல்பால் போட்டி செங்கல்பட்டு, கோவை அணிகள் முதலிடம்

மாநில அளவிலான ரோல்பால் போட்டி செங்கல்பட்டு, கோவை அணிகள் முதலிடம்

தஞ்சாவூர், ஜூலை 21-   தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில், மாநில அளவிலான ரோல்பால் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணியும், பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணியும் முதலிடம் பெற்றன. ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோஷியேசன் சார்பில், 12ஆவது மாநில அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள், தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கின. இந்த போட்டியில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல் என 25 மாவட்டங்களிலிருந்து வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.  மாவட்டம் வாரியாக போட்டிகள் நடைபெற்றன. 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணி முதலிடமும், காஞ்சிபுரம் அணி இரண்டாமிடமும், திண்டுக்கல் அணி மூன்றாமிடமும் பிடித்தன. அதேபோல மகளிர் பிரிவில் கோவை முதலிடமும், திண்டுக்கல் இரண்டாமிடமும், தஞ்சாவூர் மூன்றாமிடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகளை ரோல்பால் விளையாட்டின் தென்னிந்தியச் செயலாளர் எம்.பி. சுப்பிரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோஷியேசன் செயலாளர் சி. கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர். இதையடுத்து, இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறவுள்ளனர்.