அமைச்சர்களின் துறைகள் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சர வையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டி ருக்கும் செய்திக்குறிப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனிடம் இருந்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையானது, அமைச்சர் க. பொன்முடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே உள்ள வனத்துறையுடன் காதி, கிராமத் தொழில்கள் துறை யையும் கூடுதலாக கவ னித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.