tamilnadu

img

ரூ.450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சிபிஐ வழக்குப் பதிவு

ரூ.450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை, செப்.6- பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ.450 கோடி பழைய நோட்டு கள் மூலம் அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த சர்க்கரை ஆலையின் நிர்வாகிகள் மீது மத்திய  குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தி னர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை நடத்திய  சோதனையின்போது, சர்க்கரை ஆலை தொடர்பான ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்க்கரை ஆலையை நிர்வகித்து வந்த ஷிதேஷ் ஷிவ்கன் படேல் அளித்த வாக்கு மூலத்தில், சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு ரூ.450 கோடி  பழைய நோட்டுகளை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்ட தாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை இந்த சர்க்கரை ஆலையை பினாமி  சொத்து என அறிவித்து, உண்மையான உரிமையாளர் சசிகலா என்று குறிப்பிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த  சர்க்கரை ஆலை கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.