மானாமதுரை தெருக்களில் சாதி பெயர்கள் மாற்றம்
சிவகங்கை, செப்.30- மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாதிப் பெயர் தாங்கிய தெருக்கள் மாற்றப்பட்டுள்ள தாக நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற கூட்டத்தில் அறிவித்தார். இதன்படி, கள்ளர் தெரு ‘மல்லிகை தெரு’, வேளாளர் தெரு ‘வாகை தெரு’, மறவர் தெரு ‘செம்பருத்தி தெரு’, பள்ளர் தெருக்கள் ‘கிருஷ்ணராஜபுரம் தெருக்கள்’ என பல தெருக்கள் இனம் சார்ந்த பெயர்களிலிருந்து பொதுப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலத்தை முன்னிட்டு நகரின் முக் கிய கால்வாய்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதே போல், மானாமதுரையில் உள்ள 10 சமுதாய கழிப்பறை கள் மற்றும் 7 பொது கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு வரு கின்றன என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் பேரூராட்சித் தலைவர் உறுதி
சின்னாளப்பட்டி, செப்.30 – திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பிரதிபா கனகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலை வர் ஆனந்திபாரதிராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய தலைவர், கவுன்சிலர்கள் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் துப்புரவு அலுவலர் மணிகண்டன், எழுத்தர்கள் ராமமூர்த்தி, கலைச்செல்வி மற்றும் அலு வலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ரயில் பாதை மின் கம்பிகளை நெருங்குவது உயிருக்கு ஆபத்து
மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை மதுரை, செப்.30- மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. மின்சார ரயில்களை இயக்க இந்த ரயில் பாதைகளின் மேலே செல்லும் மின்வடங்களில் 75,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் 230 வோல்ட் மின்சாரம் மனித உடம்பில் பட்டாலே தூக்கி எறியப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. இதற்கு 100 மடங்கு அதிகமான மின்சாரம் ரயில் பாதை மின்வடங்க ளில் செல்கிறது. இதனால் ரயில் பாதை மின் வடம் அருகில் சென்றாலே பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும். எனவே பொதுமக்கள், இளைஞர்கள் ரயில் பாதை மின்வடம் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. கடந்த சனிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மேலே 13 வயது சிறுவன் ஏறி சுயபடம் எடுக்க முயன்ற போது பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அதேபோல கடந்த ஞாயிற்றன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் உருளை சரக்கு ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஏறி 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின் வடத்தை பிடித்த தால் தீப்பிடித்து தூக்கி எறியப்பட்டு நடைமேடையில் உயிர் துறந்தார். இது போன்ற சம்பவங்கள் மற்றும் விலை மதிப்பில்லாத உயிர் இழப்பை தவிர்க்கவும் ரயில் பாதை மின்வடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள் ளது.
மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பு குழுக்கூட்டம்
தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்பு தேனி, செப்.30- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவர் தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்செல் வன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப் பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேனி மக்களவை உறுப்பி னர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலையினை உறுதி செய்தல், தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட நடவடிக்கை மேற் கொள்ளுதல், பாரத பிரதமரின் அனைவ ருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (நகர்ப்புறம்) நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் நகர்மன்றத் தலை வர்கள் ரேணுபிரியா பாலமுருகன், சுமிதா சிவக்குமார், ராஜராஜேஸ்வரி சங்கர், துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பகம்) விவேக் பரஸ்நாத் யாதவ், மாவட்ட வன அலு வலர் அருண்குமார், மாவட்ட வருவாய் அலு வலர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வா.புதுப்பட்டியில் தீண்டாமைச் சுவர் அகற்றும் போராட்டம் காவல்துறை தடை; நிர்வாகிகள் மீது தாக்குதல்
திருவில்லிபுத்தூர், செப்.30- வத்திராயிருப்பு வட்டம் வா.புதுப்பட்டியில், அரசு புறம்போக்கு நிலத்தில் பால சுப்பிரமணியர் கோவில் நிர் வாகம் எழுப்பிய தீண்டா மைச் சுவரை அகற்ற கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணை ந்து போராட்டம் நடத்தின. போராட்டத்தை காவல் துறை தடுக்க முயன்றபோது, நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜோதிலட்சுமி உள்ளிட்ட நால்வர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகி ச்சை பெற்றனர். மேலும், இந் திய மாணவர் சங்க மாவ ட்டச் செயலாளர் ஆனந்த கண்ணனின் சட்டையும் கிழிக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஏ. குருசாமி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் தலைவர்கள் வட்டாட்சி யரைச் சந்தித்து மனுவிற்கு எழுத்துப்பூர்வமான பதில் பெற்றனர். இதற்கிடையில், 40-க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற னர்.