தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யக் கோரி வழக்கு
தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு பின் விதியில் மாற்றம் செய்வதா?
மதுரை, ஜூலை 12- தலைமை செயலக உதவி பிரிவு அலு வலர் பணி தேர்வு விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றம் மற்றும் தேர்வு பட்டியலை ரத்து செய்து, தன்னை தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப் பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முகமதுசுல்தான், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தி ருந்தார். அதில், “பழனி தாலுகா அலுவல கத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரி கிறேன். கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ பணியிடங்களை (தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணி) நிரப்புவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு அமைச்சு பணி, தமிழ்நாடு நீதித்துறை அமைச்சு பணி உட்பட்ட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உதவிபிரிவு அலுவலர் பணிக்கு ஆன்-லைனில் விண்ணப் பிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி நான் ஆன்-லைன் வழியாக விண்ணப்பித்தேன். எனக்கு தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டது. அதன்படி 4.1.2025 இல் தேர்வெழுதினேன். தற்போது உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வா னோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. அதில் நான் தமிழ்நாடு தலைமைச் செய லக பணி விதிகளின்படி உதவி பிரிவு அலுவ லர் பணிக்கு தகுதியில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்த்தபோது, 26.5.2025-இல் தேர்வு விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு 4.1.2025 அன்று நடந்து முடிந்த நிலையில், 4 மாதங் களுக்கு பிறகு விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்காமல் தேர்வு விதியில் மாற்றம் கொண்டு வருவது சட்டவிரோதம். தேர்வு விதி யில் மாற்றம் செய்வதாக இருந்தால், விண்ணப்பம் பெறுவதற்கு முன்பு செய்ய வேண்டும். தேர்வுக்குப் பிறகு விதிகளை மாற்றுவது விண்ணப்பதாரர்களை பாதிக்கும். எனவே தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோ ருக்கு பணி நியமன ஆணை வழங்க தடை விதித்தும், தேர்வு விதிகளில் செய்யப்பட்டு உள்ள மாற்றம் மற்றும் தேர்வு பட்டியலை ரத்து செய்தும், என்னை தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை சனிக்கிழமை விசா ரித்த நீதிபதி சரவணன், “தேர்வு தொடர்பான ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு” விசார ணையை ஒத்திவைத்தார்.