7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தலுக்கான முடி வுகள் ஜூன் 4 அன்று வெளியாகின. தேர்தல் முடிவுக்கு முன் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளன்று ஜூன் 1 அன்று பாஜக ஆதரவு பெற்ற “கோடி மீடியா” ஊடகங்கள், வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 350 முதல் 400 இடங்களை என்று கைப்பற்றும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளில் பாஜக 250 (240 இடங்கள்) இடங்க ளுக்குள் சுருண்ட நிலையில், அன்றைய தினம் பங்குச்சந்தை மிக மோசமான அளவில் வீழ்ச்சியடைந்தது. இதனால் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் உள்ள முதலீட்டாளர்கள் பலத்த சேதாரத்தை சந்தித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்நிலையில், அதானி முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை விவகார வழக்கோடு, தேர்தல் முடிவு பங்குச்சந்தை விவகாரத்தையும் சேர்த்து இடைக்கால மனுவாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் பங்குச்சந்தை சரிந்தது. அத னால் பல முதலீட்டாளர்கள் நஷ்டம டைந்தனர். இதுகுறித்து செபி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என மனுவில் கூறப்பட்டுள் ளது. அதானி - ஹிண்டன்பர்க் - செபி கடந்த ஜனவரி மாதம் அதானி முறைகேடு தொடர்பாக அமெரிக்கா வின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளி யான பின்பு இந்திய பங்குச்சந்தைகள் மிக மோசமான அளவில் பலத்த அடியை சந்தித்தன. உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், இதுகுறித்து செபி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதானி - ஹிண்டன்பர்க் தொடர்பாக செபி விசா ரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.