tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நகராட்சி அதிகாரி மீது வழக்கு

விருதுநகர், செப்.19- அருப்புக்கோட்டையில் வருமானத் திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நகராட்சி  அதிகாரி மீது இலஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர்   கிருஷ்ணமூர்த்தி. இவர் கடத் 2019 மே  முதல் 2024 மே மாதத்திற்குள்    தனது பதவியை தவறாக பயன்படுத்தி அவரது  பெயரிலும் அவரது மனைவி  கார்த்திகை செல்வி  பெயரிலும் வருமானத்திற்கு அதிக மாக சோர்த்தாக  புகார் எழுந்தது. இதையடுத்து,  விருதுநகர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இருவர்  மீதும் வழக்குபதிவு செய்தார். மேலும், வெள்ளியன்று அருப்புக்  கோட்டையில் உள்ள கிருஷ்ணமூர்த்தி யின் வீட்டில் சோதனை செய்தனர் அதில்  முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள னர். அதனைத் தொடர்ந்து புலன் விசா ரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இலஞ்ச ஒழிப்பு போலீ சார் கூறுகையில்,  அரசு அலுவலகங்க ளில் முறைகேடுகள் நடைபெற்றாலும், அரசு அலுவலர்கள். பொதுமக்களி டமிருந்து பணமாகவோ, பொருளாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமா கவோ, ஏஜெண்டுகள் மூலமாகவோ லஞ்சம் கேட்டாலும், தங்களது வருமா னத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருந்தாலும்     மாவட்ட லஞ்ச ஒழிப்பு  பிரிவு அலுவலகத்தில் நேரடியாக புகார்  தெரிவிக்கலாம். அல்லது கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் - 94981-05882, ஆய்வா ளர் - 94981-06118 என்ற எண்களை தொடர்பு  கொள்ளலாம் என தெரிவித்தனர்.

ஆம்னி கார் டயர் வெடித்து விபத்து

 சின்னாளப்பட்டி, செப்.19- திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே நான்கு  வழிச்சாலை சடையாண்டிபுரம் பிரிவு என்ற இடத்தில், மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டி ருந்த ஆம்னி வேன் எதிர்பாராத விதமாக ஆம்னி காரின் முன்  டயர் வெடித்து நான்கு வழிச்சாலை நடுவில் உள்ள மின்  கம்பத்தில் பயங்கரமாக மோதி ஆம்னி கார் விபத்துக்குள்  ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயத்துடன் உயிர்  தப்பினர்.  காரின் முன் பகுதி சேதம் அடைந்ததால்,  ஓட்டுனர் சீனி வாசன்(40) சீட்டில் அமர்ந்தபடி அவரது கால்  சிக்கிக்கொண்டது.  சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த அம்மைய நாயக்க னூர் காவல்துறையினர் தனியார் கிரேன் ஊழியர்கள்,  தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில்  பொதுமக்கள் கிரேன் உதவியுடன், கார் ஓட்டுனர்  சீனிவாசனை சுமார் அரை மணி நேரம் போராடி, காரின் முன்பகுதியை உடைத்து  அவரை பத்திரமாக மீட்டு சிகிச்  சைக்காக  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

சரக்கு வேன்- சுற்றுலா மினி லாரி மோதியதில் 10 படுகாயம்

சின்னாளப்பட்டி, செப்.19- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில், கோவையிலிருந்து-மதுரை நோக்கி வந்த சரக்கு மினி லாரியை மதுரை யைச் சேர்ந்த பிரேம்குமார்(41) என்பவர் ஓட்டிவந்தார். அம்மையநாயக்கனூர் மேம்பாலம் இறக்கத்தில் மதுரை மார்க்கமாக சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடி மினிவேன் மீது பயங்கரமாக மோதி பெரும்  விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அம்மையநாயக்கனுர் காவல்  துறை ஆய்வாளர் ஜெயபாண்டியன், டிஎஸ்பி செந்தில்  குமார் தலைமையிலான காவல்துறையினர் நிலக் கோட்டை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்பு பணி யில் ஈடுபட்டனர். சுற்றுலா வேனில் பயணம் செய்த 5 சிறு வர்கள் உட்பட காயம் அடைந்த 13 பேரையும்,  படுகாயமடைந்த சரக்கு லாரி ஓட்டுனரையும் மீட்டு சுமார் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் களில் திண்டுக்கல்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த  சுற்றுலா வேன் ஓட்டுநர் ஹரீஸ்(21) என்பவருக்கு காலில்  முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதேபோல வேனில்  முன்புறம் அமர்ந்திருந்த 3 பேர் உட்பட சரக்கு வாகன ஓட்டுநர் என 4 பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.