tamilnadu

img

தொகுதி பங்கீடு: முஸ்லிம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு அழைப்பு

சென்னை, பிப். 4- திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டிற்காக இ.யூ. முஸ்லிம் லீக் , விசிக, கொமதேக கட்சிகளுக்கு  பிப்ரவரி 12ஆம் தேதி அழைப்பு விடுக்க ப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொள்ள திமுகவுடனான கூட்டணி கட்சி களுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.  இந்நிலையில் விடுதலை சிறுத்தை கள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து வரும் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்தும் 12 தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர் பாக வரும் 12ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் பேச  திமுக குழு அழைப்பு விடுத்துள் ளது. ஐ.பெரியசாமி பேட்டி  சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள ஐ.பெரியசாமி   கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில்  இருந்து திரும்பியதும், திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப் பட்டுவிடும். அதற்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு திட்ட மிட்டுள்ளோம் என்றார். கமல்ஹாசன் தலைமையிலான  மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்து ள்ளீர்களா?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுகுறித்து முதலமைச் சர் தான் முடிவு செய்வார் என்று தெரி வித்தார்.