tamilnadu

img

குடியரசுத் துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு

குடியரசுத் துணைத்தலைவராக  சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு

புதுதில்லி, செப். 9 - இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் (68)தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் துணைத்தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், கடந்த ஜூலை 21 அன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததால், செவ்வாயன்று (செப்.9) புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் மொத்தம் 781 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 767 உறுப்பினர்கள் வாக்களித்தனர் (98.2 சதவிகிதம்). 13 பேர் வாக்களிக்கவில்லை. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் பலம் இருந்த நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 11 பேர் உட்பட மேலும் சில கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததால், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை.