கரூர், ஜூலை 16 - கரூர் மாவட்டம் புகளூரில் தமிழ் நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறு வனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன த்திற்கு முண்டிபட்டியில் யூனிட்-2 காகித ஆலையும், புகளூரில் சிமெண்ட் ஆலையும் இயங்கி வருகிறது. மொத்த மாக 6000-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். தொழிற்சாலையில், நான்கு வரு டத்திற்கு ஒருமுறை வாக்கெடுப்பின் மூலம் 15 சதவீத வாக்குகள் பெறுகிற சங்கங்கள் அங்கீகாரத்தைபெறு கின்றன. அங்கீகாரம் பெறுகிற சங்கத் துடன் மட்டும்தான் நிர்வாகம் தொழி லாளர்களின் ஊதிய நிர்ணயம் உள்ளி ட்ட விஷயங்களை பேசி முடிவுசெய்யும். டி.கே.ரங்கராஜன் தலைமையில் செயல்பட்டு வருகிற டிஎன்பிஎல் தொழி லாளர் சங்கம், கடந்த மாதம் நடந்து முடிந்த சங்க அங்கீகாரத் தேர்தலில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் வித மாக டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க குடும்ப விழா, வேலாயுதம்பாளை யத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் அரவிந்த் வரவேற்றார். சங்க செயலாளர் மகேஷ் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். கணேசன் (காப்பீட்டு சங்கம்), செல்லமுத்து (அரசு ஊழி யர் சங்கம்), முருகேசன் (சிஐடியு) ஆகியோர் வாழ்த்தி பேசினர். விளை யாட்டு மற்றும் கலைத்துறைகளில் புல மை பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றி னார். சங்கத் துணைத் தலைவர் அ. காதர்பாட்ஷா நன்றி கூறினார். இதில் சங்க உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.