விருதுநகர், மார்ச் 13- விருதுநகரில் தோழர்கள் எம். அய்யாச்சாமி-டி.இராதா கிருஷ்ணன் நினைவரங்கில் அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் 6-ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜி.செல்வராஜ் தலை மை தாங்கினார். சங்க கொடியை மாவட்ட உதவி செயலாளர் எல். சங்கையா ஏற்றி வைத்தார். அஞ்ச லித் தீர்மானத்தை மாவட்டப் பொருளாளர் எம்.பெருமாள்சாமி வாசித்தார். பொறுப்பு மாவட்டச் செயலா ளர் கே.புளுகாண்டி வேலை அறிக்கையை சமர்பித்தார். துவக்கி வைத்து மாநில செயலா ளர் என்.குப்புசாமி பேசினார். மாநில உதவி செயலாளர் எம். செல்வராஜன், ஜேசிடியு செயலா ளர் தேனிவசந்தன், பிஎஸ்என் எல்இயு மாவட்டச் செயலாளர் ஏ. குருசாமி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்துச்சாமி, மாநில அமைப்பு செயலாளர் ஏ.சமுத்திரக்கனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஜி.செல்வராஜ், செயலாளராக கே.புளுகாண்டி, பொருளாளராக எம்.பெருமாள் சாமி ஆகியோர் உட்பட 17 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.மோகன் தாஸ் சிறப்புரையாற்றினார். முடி வில், மாவட்ட உதவிச் செய லாளர் பி.சிவஞானம் நன்றி கூறி னார். மாநாட்டில், ஒன்றிய பாஜக அரசு, கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நிறுத்தி வைத் துள்ள பஞ்சப்படியை உடனே வழங்கிட வேண்டும். 15 சதவீத பென்சன் தொகையை உடனே உயர்த்தி வழங்கிட வேண்டும். மருத்துவ கட்டண பில் மற்றும் அலவன்சுகளை உடனே வழங்கி வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.