tamilnadu

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

சென்னை, செப். 19 - பிஎஸ்என்எல் ஒப்பந்த  ஊழியர்களின் பிரச்சனை களை தீர்க்க கோரி வெள்ளி யன்று (செப்.19) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் தர்ணா நடைபெற்றது. பிஎஸ்என்எல்இயு தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி, தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த  தொழிலாளர் சங்கம், பிஎஸ்என்எல் ஒப்பந்த மற்றும் கேசுவல் ஊழியர்  சங்கம்-சென்னை தொலை பேசி ஆகிய அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலா ளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பழனிச்சாமி, ஒப்பந்தம் மற்றும் கேசுவல் ஊழியர் சங்கத்தின் மாநிலத்  தலைவர் எம்.ஸ்ரீதர் சுப்பிர மணியன் ஆகியோர் போராட் டத்திற்கு தலைமை வகித்த னர். ஒப்பந்தம் மற்றும் கேசு வல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.அபிமன்யு, மாநிலச் செய லாளர் எஸ்.பாஷா, பிஎஸ்என் எல்இயு அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம். சையது இத்ரிஸ் உள்ளிட் டோர் பேசினர். சேவை அடிப்படை ஒப்பந்த முறையில் பணிபுரி யும் ஒப்பந்தத் தொழிலாளர் களை பணி நீக்கம் செய்யக்  கூடாது. பணி நீக்கம் செய் யப்பட்ட தொழிலாளர் களுக்கு மாற்றுப்பணி வழங்க  வேண்டும். ஒப்பந்த ஊழியர் களுக்கு பல மாவட்டங்களில் உள்ள ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண் டும். தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ, வருகை பதிவேடு முறை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஊழி யருக்கும் சம்பள பட்டியல்  தர வேண்டும். பைபர்நெட்  தொலைபேசி இணைப்பு களை ஒப்பந்த தொழி லாளர்கள் மூலம் வழங்க வேண்டும். 7 ஆவது ஊதிய விகிதங்களின் அடிப் படையில் கேசுவல் ஊழியர் களுக்கு ஊதியம் தர  வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய பிஎஸ்என்எல் ஒப்பந்த மற்றும் கேசுவல் ஊழியர் சங்கத்தின் அகில  இந்திய உதவிப் பொதுச்  செயலாளர் பாபு ராதா கிருஷ்ணன், “பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது 50  ஆயிரம் ஒப்பந்தத் தொழி லாளர்கள் மட்டுமே உள்ள னர். அதற்கு மாறாக, சேவை  அடிப்படை ஒப்பந்த முறை  அமல்படுத்தப் பட்டுள்ள தால், ஒன்றிய அரசு நிர்ண யித்துள்ள குறைந்தபட்ச கூலி கிடைக்காத நிலை உள்ளது. ஒப்பந்த தொழி லாளர்களிடம் பிஎப், இஎஸ்ஐ  பிடித்தம் செய்ய அரசு தொழி லாளர் துறை உத்தரவிட் டும் அமல்படுத்த மறுக் கின்றனர்.  25 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணி யாற்றியவர்களை வெளி யேற்றி வருவது ஏற்கத்தக்க தல்ல. வருவாயில் சரி பாதியை தனியாருக்கு கொடுத்து பைபர் இணைப்பு வழங்குவதற்கு மாறாக, ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் வழங்கினால் நிர்வா கத்திற்கு லாபம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு பணி உறுதி செய்யப்படும். இந்தப்  போராட்டத்தின் தொடர்ச்சி யாக தில்லியில் நாடாளு மன்றம், சஞ்சார் பவனை  நோக்கி பேரணி நடத்து வோம்” என்றார்.