tamilnadu

img

பழங்குடியினர் மீது கொடூரத் தாக்குதல்: மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பழங்குடியினர் மீது கொடூரத் தாக்குதல்: மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 15- இருளர் பழங்குடியினர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வர்களை வன்கொடுமை தடுப்புச்சட்ட த்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், வட்டவணஅள்ளி ஊராட்சி க்குட்பட்ட குழிபட்டி கிராமத்தில் இரு ளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தம்பதி யினர் வசித்து வருகின்றனர். அவர் களின் நிலத்தை அபகரிப்பதற்காக, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் அவ ரது மனைவி கோவிந்தா, மகன்கள் வீர மணி, பிரபு ஆகியோர் அந்த பழங்கு டியின தம்பதி மீது டிராக்டரை விட்டு  ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ள னர். மேலும், அந்த பெண்ணை நிர்வா ணப்படுத்தி தாக்கியதில் அவருக்கு இடுப்பு மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டது. தாக்குதலை தடுக்க முயன்ற பழங்குடியினரை சாதிப் பெய ரைச் சொல்லித்திட்டி, தாக்குதல் நடத்தி யுள்ளனர். எனவே, பழங்குடியினர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சாதி ஆதிக்க பிரிவைச் சேர்ந்த செல்வம் அவரது மனைவி, மகன்கள் மற்றும் அடியாட்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், பழங்குடியின தம்பதிக்கு சொந்தமான நிலத்திலிருந்த தேக்கு, தென்னை, கொய்யா மரங்களை சேதப்படுத்தியும் அவரது நிலத்தில் அத்துமீறி டிராக்டரை வைத்து 10 அடி அகல சாலை அமைத்தும் சேதத்தை ஏற்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாதிய ஆதிக்க நிலப்பறி கும்பலிடம் இருந்து இருளர் இன மக்களின் நிலத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்னா கரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. என்.மல்லையன் தலைமை வகித்தார்.  இதில் சங்கத்தின் மாநிலத் தலைவ ரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரு மான பி.டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், சோ.அருச்சுனன், வே.விசு வநாதன், பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜீவானந்தம், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் கே.அன்பு, என்.பி.முருகன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.