tamilnadu

img

முப்படைத் தளபதி பிபின் ராவத் பலி

குன்னூர்,டிச.8- நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி  மலைப்பாதையில் டிசம்பர் 8 புதன்கிழமை யன்று ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்த துயரகரமான விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகளும், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தும் பலியாகினர்.  முப்படைத் தலைமைத் தளபதியின் மரணத்தை இந்திய விமானப்படை, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூ ரிக்கு எம்ஐ - 17 வி5 வகை ராணுவ ஹெலிகாப்ட ரில் 14 பேர் சென்றனர். முக்கிய ஆலோ சனைக்கூட்டத்திற்காக முப்படைகளின் தலை மைத் தளபதி பிபின் ராவத் மற்றும் பல உயர்  ராணுவ அதிகாரிகளும்  பயணித்ததாக ராணுவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.  பிபின் ராவத்தின் மனைவியும் உடன் சென்றதாககூறப்படுகிறது. விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப் படையின் எம்ஐ - 17 வி5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படை களின் தலைமை தளபதி பயணித்த ஹெலி காப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது. 

முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்குப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.   மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒன்ற ரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடை பெற்றன. இந்த விபத்தில் 13 பேர் உடல்கள்  மீட்கப்பட்டன. ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாக தகவல் வெளியானது. தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே.ராமச் சந்திரன் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.  ஊட்டி- குன்னூர் இடையே சாலை போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருகிய நிலையில் உடல்கள் மீட்கப் பட்டதால் அடையாளம் காண முடியவில்லை.இதனால்  உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தில்லியில் பிரதமருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

குன்னூருக்கு விரைந்தார் முதல்வர் 

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தகவல் தெரி வித்துள்ளார். அப்போது மீட்பு பணியை துரி தப்படுத்தவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை வழங்கவும் நீலகிரி மாவட்ட  நிர்வாகத்திற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்து பொதுத்துறைச் செயலாளர் ஜகந்நாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.   இதன்பின்னர் குன்னூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் விரைந்ததாக தகவல் வெளி யானது.

மோசமான வானிலையையும் சமாளித்து பறக்கக்கூடிய திறன் வாய்ந்தது இந்த ஹெலிகாப்டர். ஹெலிகாப்டரின் எரிபொருள் கொள்ளளவும் அதிகம். ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நிகழ்ந்திருந்தால் எரிபொருள் முழுவதுமாக எரிந்திருக்கலாம் என்றும், இதனால் தீயை அணைப்பது சிரமமாக இருந்திருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் தில்லியில் உள்ள பிபின் ராவத்தின் வீட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு பிபின் ராவத்தின் மகளிடம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த தகவல்களை ராஜ்நாத் சிங் தெரி வித்துள்ளார்.  
 

;