திருத்துறைப்பூண்டி பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி புனித தெரசாள் தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகரச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், நகர்மன்ற துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.