tamilnadu

ரசிகரை தூக்கி வீசிய பவுன்சர்கள் விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்!

ரசிகரை தூக்கி வீசிய பவுன்சர்கள் விஜய் மீதான வழக்கு மதுரைக்கு மாற்றம்!

மதுரை: தவெக தலைவர் விஜய் மீது பெரம்பலூர் குன்னத்தில் பதியப்பட்ட வழக்கு மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெரியம்மா பாளையத்தை சேர்ந்தவர் சரத்குமார் (24). விஜய் ரசிகரும் தவெக தொண்டருமான இவர், தாய் சந்தோஷத்துடன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏடிஎஸ்பி பால முருகனிடம் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார். விஜய்யின் பவுன்சர்கள் என்னை அலேக்காக தூக்கி  வீசியதில் எனது மார்பகம், வலது விலா எலும்பு ஆகிய வற்றில் காயம் ஏற்பட்டது. இதனால் எனக்கு உடல் வலி அதிக மாக உள்ளது. தற்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். எனவே  விஜய் மீதும், பாதுகாப்பு குண்டர்கள் மீதும் தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டுகிறேன் என்று புகாரில் சரத்குமார் கூறி யிருந்தார். கலெக்டர் அலுவலகம், குன்னம் காவல் நிலையத்திலும் சரத்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் குன்னம் இன்ஸ்பெக் டர் கண்ணன், தவெக தலைவர் விஜய் மற்றும் பாதுகாப்பு  குண்டர்கள் 10 பேர் மீதும் பிரிவு 115(2)-10 பேர் கொண்ட கும்பல்  கையால் தாக்குதல், 296(பி)- அசிங்கமாக, தரக்குறைவாக திட்டுதல், 189(2) 5, 6 பேருக்கு மேல் கூட்டமாக நிற்பது ஆகிய  3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த  வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக் கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.