அம்மா உணவகத்தில் இட்லி வாங்கி, அதிக விலைக்கு விற்பனை
உதகை, அக்.24- நீலகிரியில், அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி, உணவகங்க ளில் 10 ரூபாய்க்கு விற்பதாக எழுந்த புகா ரின்பேரில், சம்பந்தப்பட்ட உணவங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவறை ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு கூலித் தொழிலா ளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் போன்ற பெருவாரியான மக்கள் கூட்டம் அம்மா உணவகங்களில் உணவருந்துகின்ற னர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணி கள் அதிகம் வரக்கூடிய உதகை பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதி யில் இரு அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக உதகை பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவ கத்தில், ஒரு ரூபாய்க்கு இட்லியை வாங்கி, அந்த பகுதியைச் சேர்ந்த ஓட்டல்களில் 10 அல்லது 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களில் இருந்து மொத்தமாக வாங்கிச் செல்வதால் அம்மா உணவகத்திற்கு செல்பவர்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், உதகை பேருந்து நிலையம் முன்புறம் உள்ள அம்மா உணவகம் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். பகல் நேரத்தில் வாடிக்கையாளர்கள் போல வந்து மொத்த மாக உணவை வாங்கி விற்பனை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் அம்மா உணவகத்தின் நோக்கம் சிதைந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுக ளுக்கு முன் குன்னூரில் இதுபோல் சம்ப வம் நடந்து, அதன் பின்னர் அதற்கு முடிவு கட்டப்பட்டது. இதற்கு அதுபோல் தீர்வு ஏற்ப டுத்த வேண்டும், என்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதகை வருவாய் அலுவலர் நஞ்சுண்டன் தலைமை யிலான குழுவினர், அம்மா உணவகத்தில் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து நக ராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ஒரு வீட் டில் உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் மொத்தமாக உணவு தேவை என்று கூறி இட்லி வாங்கி சென்றுள்ளனர். இதுபோல் மொத்தமாக யாருக்கும் பார்சல் தரக்கூடாது என்று கூறியுள்ளோம். ஒருவேளை மொத்த மாக ஐந்து பேருக்கு தேவையான உணவு பார்சல் கேட்டால் கூட அவர்களின் செல் போன் எண்ணை வாங்கிக்கொண்டு தர அறிவு றுத்தியுள்ளோம். ஐந்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு பார்சல் தரக்கூடாது என்று உத்தர விட்டுள்ளோம். அம்மா உணவகத்தில் இருந்து எந்த ஓட்டல்களுக்கு உணவு செல்கி றது என்பது குறித்து சனியன்று (இன்று) ஆய்வு செய்யப்படும், என்றனர்.