tamilnadu

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை  ஒட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து  புறப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. முக்கிய ரயில்களில் காத்தி ருப்போர் எண்ணிக்கை 1,000 வரை பதிவாகியுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு தேவை அதிகமாக உள்ளது  என்று ஆய்வு செய்து, அதற்கேற்ப சிறப்பு ரயில்கள்  இயக்கப்படுகிறது.  அந்த வகையில், நாகர்கோவில் செப்.28, அக்.5,  12, 19, 26-இல் இரவு 11.15க்கு புறப்படும் ரயில் மறுநாள்  பகல் 12.30-க்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் செப்.29,  அக்.6, 13, 20, 27-இல் பிற்பகல் 8.30-க்கு புறப்பட்டு  காலை 5.15-க்கு நாகர்கோவில் வரும். சென்ட்ரலில்  செப்.25, அக்.2, 9, 16, 23-இல் இரவு 11.50-க்கு புறப்ப டும் ரயில் மறுநாள் காலை 8.30-க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கம் போத்தனூரில் செப்.26, அக்.3,  10, 17, 24-இல் மாலை 6.30-க்கு புறப்பட்டு, காலை 3.15-க்கு சென்ட்ரல் வரும். சென்னை சென்ட்ரலில் செப்.24, அக்.1, 8, 15, 22-இல் பிற்பகல் 3.10-க்கு புறப் பட்டு, காலை 6.30-க்கு செங்கோட்டை செல்லும்.  மறுமார்க்கமாக செங்கோட்டையில் செப்.25, அக்.2, 9, 16, 23-இல் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, காலை  11.30-க்கு சென்ட்ரல் வரும். நெல்லை - சென்னை எழும்பூர் இடையே செப்.25, அக். 2, 9, 16, 23-இல்  இரவு 9.30-க்கும், சென்னை எழும்பூர் - நெல்லை  இடையே செப்.26, அக். 3, 18, 17, 24-இல் நண்பகல் 12.30-க்கு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. தூத்துக் குடியில் இருந்து செப்.29, அக்.6, 13, 20, 27-இல் இரவு  11.15-க்கு புறப்படும் ரயில் காலை 10.45-க்கு எழும்பூர்  வரும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து செப்.30,  அக்.7, 14, 21, 28-இல் பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு,  இரவு 11.15-க்கு வந்து சேரும்.  சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.17) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.