தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் ஒப்பந்தம் கையெழுத்து
கடலூர், அக்.8- தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் போனஸ் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடலூர், பண்ருட்டி தாலுகா பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும், கடலூர், பண்ருட்டி பஸ்தொழிலாளர் நல சங்கத்திற்கும் போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று புதனன்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பஸ்உரிமையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.தேசிங்கு ராஜன், தலைவர் ஏ.ஆர்.வேலவன், செயலாளர் வி.சதீஷ்குமார், பொருளாளர் பி.சிவாஜி, பஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.குருராமலிங்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் இ.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி 2024 - 2025 ஆம் ஆண்டு ஓட்டுநருக்கு போனஸாக ஒரு மாதசம்பளம் மற்றும் கருணை ரூ.23,260,நடத்துநருக்கு ஒரு மாத சம்பளம் கருணைத்தொகை 23,000 வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதேபோல் வருடத்திற்கு இரண்டு செட்டு சீருடை, 2 ஜொடி காலணி வழங்கவும், இரவு தங்கும் படி ரூ.50 வழங்கவும் நிர்வாக தரப்பில்ஒப்புக்கொண்டது.இந்த தொகை 19.10.2025க்கு முன்னதாக வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டதால் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
