முதலமைச்சர், நடிகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ள னர். சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலி னின் வீடு, தமிழக பாஜக தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீடு ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
யார் உண்மையான தலைவர்?
சென்னை: தொண்டர்களைப் பார்த்து பயம் கொள்பவர் உண்மையான தலைவர் கிடையாது என நடிகர் சத்யரா ஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ் கூறி யுள்ளார்.
6.91 லட்சம் பேர் பயணம்
சென்னை: அரசு போக்குவரத்துத் துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், வார இறுதி நாட்கள் மற்றும் ஆயுத பூஜையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறையின் சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில், செப்.30 நள்ளிரவு 12 மணி நிலவரப்படி 13,303 பேருந்துகள் இயக்கப்பட்டன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்பேருந்துகளில் 6,91,757 பேர் பயணித்து உள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கை: தலைமைச் செயலக சங்கம் கண்டனம்
சென்னை, அக்.3 - ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கை அளித்துள்ளதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் அனைத்துமே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியக் குழு கால நீட்டிப்பு கோரக் கூடாது என்று வலி யுறுத்திய நிலையில், இடைக்கால அறிக் கையை சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் ஓய்வூதியக் குழு நம்பகத்தன்மையை முற்றாக இழந்துள்ளது. விரைவில் இறுதி அறிக்கை தரப்படும் என்று ஓய்வூதியக்குழு கூறியுள்ளது. விரை வில் என்கிற வார்த்தைக்கு கால அளவு என்ன? சம்பிரதாயமாக காலத்தைக் கடத்தும் நடவ டிக்கையில் ஓய்வூதியக் குழு ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் ஓய்வூதியக் குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போராட்ட களத்திற்கு இட்டுச் செல்கிறது. அர சுடன் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கிறது. அமைதி சூழலை சிதைக்கிறது. 2026 சட்ட மன்றத் தேர்தலில் இக்குழுவின் மோசமான செயல்பாடானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இறுதி அறிக்கை தராமல் இடைக்கால அறிக்கை அளித்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தும், ஓய்வூதியக் குழு தனது நம்பகத் தன்மையினை முற்றாக இழந்து விட்டதைத் தெரிவிக்கும் வகையி லும் அக்.6 அன்று தலைமைச் செயலகப் பணி யாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணி யாற்றுவார்கள். முதலமைச்சர் பிரச்சனையின் தீவி ரத்தை உணர்ந்து, தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை உடனடியாக நடை முறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் வலியுறுத்தி உள்ளார்.
சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள் தேர்வு
சேலம், அக்.3 - தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் 6 ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சேலம் ஐந்து ரோடு பகுதியில், மாநிலத் தலைவர் கே. ஆறுமுக நயினார் தலைமையில் தமிழ்நாடு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் 6 ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் வி. குப்புசாமி வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளா ளர் பி.பார்த்தசாரதி வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயல் தலைவர் கே.ஆறுமுக நயினார் புதிய நிர்வாகி களை அறிவித்து நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் மாநிலத் தலைவராக பா.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளராக வி.குப்புசாமி, பொருளாளராக பி.பார்த்தசாரதி, துணைப் பொதுச் செயலாளராக திருமலை உள்ளிட்ட 9 துணைத் தலைவர்கள், 9 துணைச் செயலாளர்கள் உட்பட 40 பேர் கொண்ட சம்மேளனக் குழு தேர்வு செய்யப்பட்டது.
‘ஆறுதல் சொல்ல கூட வரலையே...’
திருச்சி: தமிழக வாழ்வு ரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உங்கள் விஜய் உங்க ளைப் பார்க்க வருகிறேன் எனக்கூறி, நீங்கள் அழைத் ததன் பேரில் தான் உங்கள் ரசிகர்களும், பொதுமக்களும் அங்கே வந்தனர். அங்கு அவர் கள் செத்து மடிந்து கிடக் கும் போது, நீங்களும், உங்கள் கட்சி நிர்வாகி களும் பத்திரமாக எவ்வாறு இல்லம் திரும்பி னீர்கள். அவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவார். இந்த சம்பவத்துக்கு விஜய் மற்றும் தவெக கட்சி பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.
துரித நடவடிக்கை
விழுப்புரம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜெ. ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பேரிடர் காலங் களில் பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் மூலம் அனைத்துப் பணிகளை யும் மேற்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம் இருந்து வருகிறது. அதற் கான முழு பணிகளை மேற்கொள்ள முதல மைச்சர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், வாரி யத்தில் காலியாக உள்ள பணியிடங்களை முழு மையாக நிரப்பிட வேக மாக பணிகள் நடை பெற்று வருகின்றன” என்றார்.